வீட்டைக் காலி செய்ய நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு உத்தரவு.. அமைதியாக வெளியேறினார் சென்னை: அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார். சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது பழுத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார். சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்க...
Popular posts from this blog
அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம் நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் கடும் வீழ்ச்சி அடைந்ததால் வருவாயை உயர்த்தும் விதத்தில் புது முயற்சியாக தனது யூடியூப் இணையதளத்தின் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூகுள் எக்ஸ்பிரஸ் மார்க்கெட் ப்ளேஸ் இனி கூகுள் ஷாப்பிங் எனவும் பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவை இணையதள விளம்பரங்கள் மூலம் அசுர வளர்ச்சியடைந்து லாபம் ஈட்டுவதைத் தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் தனது பாதையை மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எதையும் ஆர அமர உட்கார்ந்து யோசிக்கவும், சாப்பிடவும், ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் அதற்காக தனியாக நேரத்தை செலவிடவும் முடியாத நிலை உள்ளது. நம்...
Comments
Post a Comment