Posts

Showing posts from May, 2019
Image
வீட்டைக் காலி செய்ய நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு உத்தரவு.. அமைதியாக வெளியேறினார் சென்னை: அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார்.                                சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது பழுத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.     சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்க...
Image
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 3 நோயாளிகள் உயிரிழப்பு!      மதுரை: கவலைக்கிடமான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், வென்ட்டிலேட்டர் செயல்படாததால், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.       நேற்று சாயங்காலம் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. இந்த சூறைக்காற்றால் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. கரண்ட் கம்பிகள் அறுந்து விழுந்ததில், பல இடங்களில் கரண்ட் போனது.                                                அதுபோல, மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரியிலும் கரண்ட் போய்விட்டது. இதனால் உடனடியாக ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஆனால் அந்த ஜெனரேட்டரும் திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது. இதனால் ஆஸ்பத்திரி முழுக்க கரண்ட் இல்லாமல் போய்விட்டது. தலை காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் கரண்ட் இல்லாததால் செயல்படவில்லை. இந்த பிரிவில் சிகிச்சையில் இருந்த 15 நோயாள...
Image
அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்      நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் கடும் வீழ்ச்சி அடைந்ததால் வருவாயை உயர்த்தும் விதத்தில் புது முயற்சியாக தனது யூடியூப் இணையதளத்தின் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூகுள் எக்ஸ்பிரஸ் மார்க்கெட் ப்ளேஸ் இனி கூகுள் ஷாப்பிங் எனவும் பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது.                              ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவை இணையதள விளம்பரங்கள் மூலம் அசுர வளர்ச்சியடைந்து லாபம் ஈட்டுவதைத் தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் தனது பாதையை மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது.   இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எதையும் ஆர அமர உட்கார்ந்து யோசிக்கவும், சாப்பிடவும், ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் அதற்காக தனியாக நேரத்தை செலவிடவும் முடியாத நிலை உள்ளது. நம்...